சென்னை எம்.எல்.ஏக்கு தம்பியால் வந்த சிக்கல்! இதுதான் அந்த உவ்வே விவகாரம்!

அவர் பெயர் வேண்டாம்.சென்னையின் வர்த்தக மையமாக திகழும் தொகுதி எம்.எல்.ஏ அவர்.


ஆனால் ஆளும் தலைமைக்கு நெருக்கமானவர் என்பதால் கொஞ்சம் ஆடி விட்டதால் கட்சிக்குள் இப்போது அவர் நிலமை சரியில்லை பாவம்,ஏற்கனவே ஓரே சமையத்தில் கட்சிப் பதவியிலிருந்து நீக்கிய விவகாரம் தலைமைக் கழக முற்றுகை வரை போய்,மாவட்டச் செயலாளர் பதவியை பறிக்கப் போகிறது தலைமை என்று உட்கட்சி நிலமை உஷ்ணமாகிவிட ,

இன்னும் இரண்டு எம்.எல்.ஏக்களையும் அழைத்துக் கொண்டு கொடைக்கானலுக்கு  போய் பதுங்கி விட்டார்.ஆனால்,இப்போது அவர் தம்பி செய்திருக்கும் காரியத்தால் இப்போது கொடைக்கானலிலும்' குப்'பென்று வியர்த்துக் கொட்டுகிறதான் அந்த தலைமறைவு எம்.எல்.ஏவுக்கு!

அவருடைய தம்பிக்கு சென்னை கோடம்பாக்கம் யுனைடட் இந்தியா காலணியில் உள்ள ஒரு பங்களாவுக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் பழக்கம் உண்டாம்.அவர் வரும்போதெல்லாம் கணவரை இழந்த பெண் ஒருவரும் அங்கு வந்து எம்.எல்.ஏவைச் சந்திப்பாராம்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்தபோது வெளியில் இருந்து காலிங் பெல் அடிக்கும் ஓசை கேட்டதாம்.

எம்.எல்.ஏ தம்பி எதார்த்தமாகப் போய் கதவைத் திறக்க எதிரே அவரது மகனும் சில நண்பர்களும் நிற்பதைப் பார்த்து திகைத்து நின்று விட்டாராம்.ஆனால் மகன் அம்மா சொல்லி அனுப்பியபடி அங்கே இருந்த அப்பாவின் காதலியை சரமாரியாக தாக்க ,அவர் அலர அக்கம்பக்க்தில் ஆட்கள் கூடி விட்டார்களாம்.

தம்பி தன் எம்.எல்.ஏ அண்ணனுக்கு போன் அடிக்க,அவர் லோக்கல் போலீசுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்தாராம்.அதன்படி அங்குவந்த போலீசார் கூட்டத்தை விரட்டி,தம்பியையும் தம்பி மகனையும் அனுப்பிவிட்டு படுகாயம் அடைந்த பெண்ணை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள். இதுவரை யார் மீதும் எந்த விதமான வழக்கும் பதியப்படவில்லை என்பதே இப்போதைய நிலவரம்.

எம்.எல்.ஏ. தம்பி செய்த விவகாரம் இப்போது கோட்டைக்குப் போய்விட, எடப்பாடி டென்ஷனில் இருக்கிறாராம்.