10 மாத திட்டம்! ஒரு வழியாக கள்ளக்காதலனை போட்டுத்தள்ளிய மஞ்சுளா! மகனை கொன்றதால் பழிக்குப் பழி!

சென்னையில் தான் உல்லாசத்துக்கு வராத காரணத்தினால் தனது மகனை கடத்திச் சென்று கொலை செய்த கள்ளக் காதலனை மின்வாரிய பெண் ஊழியர் மஞ்சுளா கூலிப்படையை வைத்து தீர்த்துக் கட்டியுள்ளார்.


சென்னை நெசப்பாக்கம் ஏழுமலை தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். கணவனை இழந்து வாழ்ந்து வந்த மஞ்சுளாவை காதலித்து கார்த்திகேயன் திருமணம் செய்து கொண்டார். மஞ்சுளாவின் கணவர் மின்வாரியத்தில் பணியில் இருந்த போது காலமானார். இதனால் அவரது வேலை மஞ்சுளாவுக்கு கிடைத்தது. இந்த நிலையில் கார்த்திகேயனை திருமணம் செய்து கொண்டு நெசப்பாக்கத்தில் மஞ்சுளா வாழ்ந்து வந்தார்.

   கார்த்திகேயன் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுவிடுவார். இந்த நிலையில் மஞ்சுளாவின் வீட்டிற்கு அருகே நாகராஜ் என்பவன் இருந்துள்ளான். கார்த்திகேயன் மூலமாக வீட்டு வேலை செய்ய வந்த நாகராஜ் அடிக்கடி மஞ்சுளாவிடம் பேசிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் வீட்டு வேலைகளையும் நாகராஜ் செய்து வந்துள்ளான். அத்துடன் மஞ்சுளாவின் மகன் ரித்தேஷ் சாயை பள்ளிக்கு கொண்டு சென்று விடுவது உள்ளிட்ட வேலைகளையும் நாகராஜ் பார்த்து வந்துள்ளான்.

   ஒரு கட்டத்தில் நாகராஜ் – மஞ்சுளா இடையேயான பழக்கம் கள்ளக்காதலானது. கணவன் அடிக்கடி வெளியூர் செல்வதை பயன்படுத்தி இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். ஒரு நாள் நாகராஜூம், மஞ்சுளாவும் உல்லாசமாக இருப்பதை மகன் ரித்தேஷ் சாய் பார்த்துள்ளான். அத்துடன் தனது தந்தை கார்த்திகேயனிடமும் ரித்தேஷ் சாய் தனது தாயின் கள்ளக் காதல் விவகாரத்தை கூறியுள்ளான்.

  இதனால் கார்த்திகேயன் கண்டித்ததை தொடர்ந்து நாகராஜ் உடன் பேசுவதை மஞ்சுளா நிறுத்தியுள்ளார். நாகராஜ் பலமுறை கேட்டும் உல்லாசத்திற்கு உடன்பட மஞ்சுளா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலும் கள்ளக்காதல் விவகாரம் கார்த்திகேயனுக்கு தெரிய காரணமாக இருந்த கோபத்திலும் சிறுவன் ரித்தேஷ் சாயை கடத்திச் சென்று நாகராஜ் கொடூரமாக கொலை செய்துவிட்டான்.

  கடந்த மார்ச் மாதம் இந்த கொலை நடைபெற்ற நிலையில் இரண்டு மாதங்களில் நாகராஜ் ஜாமீனில் வெளியே வந்துள்ளான். மகனை கொடூரமாக கொலை செய்த நாகராஜை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்கிற திட்டத்தில் மஞ்சுளா உறுதியாக இருந்துள்ளார். இதனை தெரிந்து நாகராஜ் ஜாமீனில் வந்த பிறகு தனது சொந்த ஊரான திருவண்ணாமலை சென்றுவிட்டான்.

   இருந்தாலும் வெறி அடங்காத மஞ்சுளா துப்பாக்கி வாங்கி நாகராஜை போட்டுத்தள்ள முயற்சி செய்தார். ஆனால் மூன்று லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மஞ்சுளாவிற்கு பொம்மை துப்பாக்கியை ஒரு கும்பல் கொடுத்து ஏமாற்றிவிட்டது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்று கடந்த ஜூலை மாதம் பிரச்சனையில் சிக்கினார் மஞ்சுளா. அப்போது மஞ்சுளாவை எச்சரித்து போலீசார் விடுவித்தனர்.

   இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மஞ்சுளா இந்த முறை கூலிப்படை மூலமாக கள்ளக் காதலன் நாகராஜை போட்டுத்தள்ள திட்டமிட்டுள்ளார். இதற்கு நான்கு பேர் அடங்கிய கூலிப்படையிடம் பேரம் பேசியுள்ளார் மஞ்சுளா. பேசிய தொகையை தருவதாக மஞ்சுளா கூறியதை தொடர்ந்து திருவண்ணாமலையில் டீக்கடையில் வேலை பார்த்து வந்த நாகராஜை இரண்டு நாட்களுக்கு முன்னர் கூலிப்படை வெட்டிக் கொலை செய்தது.

   கொலை திருவண்ணாமலையில் நிகழ்ந்த காரணத்தினால் அதற்கான காரணம் அந்த போலீசாருக்கு தெரியவில்லை. இதன் பிறகு நாகராஜ் மீது சென்னையில் கொலை வழக்கு ஒன்று விசாரணையில் உள்ளதை போலீசார் தெரிந்து கொண்டு சென்னை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் தான் தனது மகனை கொலை செய்த நாகராஜை மஞ்சுளா கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.

   இதனை போலீசார் தேடுவதை அறிந்த மஞ்சுளா கூலிப்படையினர் நான்கு பேரையும் அழைத்துக் கொண்டு எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஐந்து பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மகனை கொலை செய்த கள்ளக்காதலனை 10 மாதங்களுக்குள்ளாக திட்டம் தீட்டி மஞ்சுளா தீர்த்து கட்டியுள்ளார்.