தந்தை உயிரிழந்து 14 நாட்கள்! பெற்ற மகனால் தாய்க்கு ஏற்பட்ட பயங்கரம்! பூட்டிய வீட்டுக்குள் பகீர் சம்பவம்!

தாயை கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த மனநலம் பாதிக்கப்பட்டவரால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது கணவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால், மகனுடன் வசித்து வந்தார். எத்திராஜ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருடைய மனைவி நீண்ட நாட்களாக அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கணவர் இறந்த சோகத்தில் சரஸ்வதி உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதைக்கண்ட எத்திராஜ் நாம் இனிமேல் வாழ வேண்டாம் தற்கொலை செய்து கொள்வோம் என சரஸ்வதியிடம் கூறியிருக்கிறார். 

இதனை அடுத்து, நேற்று காலை சரஸ்வதியின் கழுத்தை அறுத்து விட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள கத்தியால் வயிற்றை குத்தி இருக்கிறார் எத்திராஜ். வயிற்றிலேயே கத்தி மாட்டிக்கொண்டதால் வலியால் மிகவும் அலறி இருக்கிறார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் நுழைந்து பார்த்ததில் சரஸ்வதி சடலமாக கொடுத்ததையும் இவர் வயிற்றில் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்ததையும் அறிந்து உடனடியாக அருகில் இருந்த காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரஸ்வதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் எத்திராஜ் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.