மசாஜ் சென்டர் பெயரில் மஜா! இளம் பெண்களை கொத்தாக அள்ளிய போலீஸ்!

சென்னை அம்பத்தூர் அருகே மசாஜ் மையம் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


அம்பத்தூரை அடுத்த நொளம்பூரில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான ஒரு மசாஜ் மையம் ஒன்று உள்ளது இதில் பகல் முழுவதும் மசாஜ் சென்டர் ஆகவும் இரவில் இங்கு பாலியல் தொழில் நடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அருகில் உள்ளவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சிலர் அப்பகுதியில் மறைமுகமான சோதனையில் ஈடுபட்ட போது அங்கு பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது அங்குள்ள பத்மா தெருவில் உள்ள ஒரு வீட்டில்  பாலியல் தொழில் நடத்தப்படுவது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் இரு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து அத்தொழிலை நடத்தி வந்த மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அதன் உரிமையாளர் மணிகண்டன் அங்கு பாலியல் தொழில் நடைபெற்று வருவதை ஒப்புக்கொண்டார். பகல் முழுவதும் மசாஜ் மையம் என்ற அடையாளத்துடன் செயல்படும் பின்னர் இரவு நேரங்களில் பாலியல் தொழில் செய்து வந்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார் .

இதையடுத்து இணையதளம் மூலம் மசாஜ் சென்டர் புக் செய்பவர்களுக்கு இரவு நேரங்களில் இன்ப விருந்து கொடுத்துள்ளார்.இதனைத்தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 2 பெண்கள் மீட்கப்பட்டு சென்னை அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதன் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.