பிரசாதத்தில் விஷப் பொடி! சென்னை தம்பதிக்கு நேர்ந்த திக் திகில் முடிவு! அதிர வைக்கும் சம்பவம்!

சென்னையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று விட்டு ஏமாற்றிய நபர் பணத்தை திருப்பி கேட்டவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


காசிமேடு பகுதி சேர்ந்த கார்த்திக் என்பவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலையை இழந்து ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார்.  

இந்நிலையில் கார்த்திக்கிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறிய மகா கவி பாரதி நகரைசேர்ந்த வேலாயுதம் என்பவர் ரூ.4 லட்சம் பணம் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. பணம் வாங்கி 4 ஆண்டகள் ஆகியும் வேலை வாங்கி தராமல் அலைக்கழித்தள்ளார் வேலாயுதம். இதனால் பொறுமை இழந்த கார்த்திக் பணம் கேட்டு வேலாயுதத்திற்கு நெருக்கடி கொடுத்தார்.

இத நிலையில் கார்த்திக்கை தொலைபேசி மூலம் அழைத்த வேலாயுதம், அரசு வேலைக்கான நியமன கடிதம் வந்துள்ளதாகவும் நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் கூறப்படுகிறது. இதை நம்பி மனைவி சரண்யாவுடன் வேலாயுதம் வீட்டிற்கு சென்றார் கார்த்திக். அப்போது கோவில் பிரசாதம் என்று கூறி ஒரு பொடியை கார்த்திக் மற்றும் சரண்யாவுக்கு வேலாயுதம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதை சாப்பிட்ட கார்த்திக் ஏதோ உடல் உபாதை ஏற்படவே அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முல்லைநகர் அருகே வந்தபோது கார்த்திக் மற்றும் சரண்யா ஆகியோர் மயங்கி விழுந்தனர். அவர்களை பொதுமக்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். சரண்யாவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து எம்.கே.பி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து வேலாயுதத்தை கைது செய்தனர்.