பச்சிளம் நாய் குட்டிகளுக்கு பாலியல் தொந்தரவு! சைக்கோ இளைஞனை துரத்தி பிடித்தது போலீஸ்!

சென்னையில் பச்சிளம் நாய்க்குட்டிகளை பயன்படுத்தி உடலுறவு மேற்கொண்டு வரும் சைக்கோ இளைஞனை போலீசார் கைது செய்தனர்.


சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதியில் கடந்த 14ந் தேதி சந்தேகத்துக்கு இடமான ஒரு நபரின் நடமாட்டம் இருந்துள்ளது. அப்பகுதியில் சுற்றிவரும் நாய்க்குட்டிகள் அருகாமையில் செல்வதும் தன்னுடைய உடைகளை களைந்து மாக அந்த நபர் இருந்துள்ளான்.

அவனுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த ஒரு நபர் தனது வீட்டில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார். அப்போது அவர் பார்த்த காட்சி மிகவும் கொடூரமாக அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் இருந்தது.

டிப்டாப் உடையுடன் இருக்கும் அந்த இளைஞன் திடீரென தனது உடைகளைக் களைந்து நாய்க்குட்டிகளை தவறான முறையில் பயன்படுத்தி உடலுறவு செய்யும் காட்சி அதில் பதிவாகி இருந்தது. உடனடியாக விலங்குகள் நல அமைப்பான ப்ளூ கிராஸ்க்கு அந்த நபர் தகவல் அளித்தார்.

விரைந்து வந்த ப்ளூ கிராஸ் அமைப்பினர் அந்த சிசிடிவி காட்சிகளை பெற்றுக்கொண்டு மாதவரம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். நாய்க்குட்டிகளை வைத்து உடலுறவு செய்யும் நபர் நிச்சயமாக சைக்கோவாக தான் இருக்க முடியும் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். 

சிசிடிவியில் உள்ள நபரின் அங்க அடையாளங்களை வைத்து மாதவரம் முழுவதும் போலீசார் சல்லடையாக துளைத்தனர். இறுதியில் அந்த சிசிடிவியில் இருக்கும் நபர் பெயர் பாஸ்கர் என்று கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நபரை போலீசார் வீடு தேடிச் சென்று பிடிக்க முயன்றனர்.

அப்போது பாஸ்கர் தப்பி ஓட முயன்றதால் போலீசார் துரத்தி பிடித்தனர். அவனை இழுத்துச் சென்று மருத்துவ பரிசோதனைக்கும் போலீசார் உட்படுத்தினர். மேலும் அவனை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாய்குட்டிகள் தானே என்று விடாமல் போலீசார் 2 வாரமாக விசாரித்து இந்த சைக்கோவை கைது செய்துள்ளனர்.