ஸ்கூலில் இருந்து திரும்பும் மகன்களுக்காக சாலையில் காத்திருந்த பெண்மணி மீது அறுந்து விழுந்த மின்வயர்! நொடியில் ஏற்பட்ட பயங்கரம்! அதிர்ச்சியில் உறைந்த ரெட்ஹில்ஸ்!

சென்னை: பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த பெண் மீது மின் கம்பி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.


சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் காவேரி. 34 வயதான இவர் அங்குள்ள பவானி நகரில் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று (நவ.,27) பள்ளிக்குச் சென்றிருந்த தனது மகன்களை வீட்டிற்கு அழைத்து வர சென்றார்.

அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த அவர் மீது சாலையில் சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பி விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தார்.

மின்வாரியம் அலட்சியமாகச் செயல்பட்டதே விபத்திற்குக் காரணம் எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலந்து போகச் செய்தனர்.