2 மங்கலகரமான பெண்கள்! 1 நகை கடை உரிமையாளர்! நொடிப்பொழுதில் அரங்கேறிய தகாத செயல்! வைரல் வீடியோ!

சென்னையில் நகைக்கடை ஒன்றில் கடை முதலாளியின் கவனத்தை திசைதிருப்பி கடையில் உள்ள நகைகளை நூதன முறையில் திருடிய பலே திருட்டு கும்பல். கடையில் இருந்த சிசிடிவி காட்சி மூலம் திருட்டு சம்பவம் தெரியவந்தது.


சென்னை பழைய வண்ணாரப் பேட்டை பகுதியில் தருண் குமார் என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அப்போது அவரது நகைக்கடைக்கு இரு பெண்கள் நகை வாங்குவது போல் வந்து கடைக்காரரிடம் கவனத்தைத் திசைதிருப்பி கடையில் உள்ள நகைகளை திருடிச் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற பிறகு கடை உரிமையாளர் அங்கு இருந்த நகைகளை அடுக்கி வைத்த போது சில நகைகள் காணாமல் போனதை தெரிந்து அதிர்ந்தார்.

உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் நகை திருடு போய்விட்டது என புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரை அடுத்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை எடுத்து பார்த்துள்ளனர் ,அப்போது கடைக்கு இரு பெண்கள் வந்துள்ளனர் அவர்களில் ஒருவர் கடைக்காரரிடம் நைசாக பேச்சுக் கொடுப்பது போல் பேசியுள்ளார். 

அப்போது  மற்றொரு பெண் கடையின் உள்ளே கையை விட்டு அங்கிருந்த சிறு தோடு மற்றும் மோதிரங்களை எடுத்து தனது பையில் போட்டு உள்ளது வீடியோவாக பதிவாகி இருந்தது. இந்நிலையில் அவர்கள் இருவர்கள் தான் நகையை திருடியுள்ளனர், என்பதை போலீசார் கண்டறிந்தனர்

இந்நிலையில் சிசிடிவி கேமரா காட்சியில் அவர்களது முகம் சரியாக பதிவாகாத நிலையில் அவர்களின் சிறுசிறு அடையாளங்களை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.