எல்லாம் ஆந்திரா ஐட்டங்கள்..! சென்னையில் சீப் ரேட்டில் பலான தொழில் நடத்தி வந்த பத்திரிகையாளர்! போலீசையே அதிர வைத்த சம்பவம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏதும் அறியா பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த போலி பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார்.


திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ளது மண்ணூர்பேட்டை. இங்குள்ள பிள்ளையார் கோவில் தெருவில் ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமாக ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

மேலும் பெண்களும் ஆண்களும் அடிக்கடி வந்து செல்வதால் விபச்சார விடுதி போல் செயல்படுவதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்ததின் பேரில் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த மருதராஜ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் ஆந்திர பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட அப்பாவி ஏதும் அறியாத ஆந்திர பெண்களை மீட்டு போலீசார் காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர் ஒரு போலி பத்திரிகையாளர் என்பதும் போலி நிருபர் அட்டை ஒன்றை மாட்டிக்கொண்டு சுற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.