என் வேலை என் மகனுக்கு கிடைக்கட்டும்! ரிட்டயர்டு ஆக உள்ள நிலையில் ICF சீனியர் டெக்னீசியன் எடுத்த பகீர் முடிவு! கலங்கும உறவுகள்!

சென்னை ஐ.சி எப் ல் வேலைப்பார்த்து வந்த பொறியாளர் ஒருவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பட்டாபிராம் பகுதியை சேர்ந்த ராஜாமணி , ஐ சி எப் ல் எல்க்டிக்கல் பொறியாளராக வேலைப்பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று, காலையில் வழக்கம் போல பணிக்கு வந்துள்ளார். 

யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், நீண்ட நாட்களாக விடுப்பு எடுத்துள்ளதாகவும், அதனால் அவர் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கபட்டதாகவும் கூறப்படுகிறது, இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில் தான், ராஜாமணி தனது வேலையை மகனுக்கு கொடுக்க வேண்டும் என திட்டமிட்டு சினிமா பாணியில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. 

தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்கு அனுப்பியுள்ளார்கள், மேலும் அவருக்கு வேலைப்பளு ஏதேனும் இருந்துள்ளதா , அதனால் வெளியில் சொல்ல முடியாமல் தான் வேறு வழியில்லாமல் இந்த முடிவை எடுத்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.