திருமணம் முடிந்த கையோடு தவிக்கவிட்டு வெளியூர் சென்ற கணவன்! ஏக்கத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு!

திருவையாறு அருகே திருமணமான சில நாட்களிலேயே கணவர் வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டதால் கணவர் வீட்டில் இருந்த மனைவி திடீரென மாயமாகியுள்ளார்.


 இந்நிலையில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அப்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவையாறை அடுத்த ஆச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராபின்சன் இவருக்கும் திருச்சி மாவட்டம் சங்கிலாண்டபுறம் பகுதியை சேர்ந்த பிலோமினா என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் அவரது கணவர் ராபின்சன் வேலை விஷயமாக சென்னைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ராபின்சன் வீட்டில் அவரது மனைவி தனியாக வசித்து வந்துள்ளார். இதையடுத்து சென்னை சென்ற அவரது கணவர் ராபின்சன் பல நாட்களாக பிலோமினாவிடம் பேசாமல் இருந்துள்ளார்.

அவரது மனைவி போனில் தொடர்பு கொண்டாலும் வேலை இருக்கிறது நான் அப்போது பேசுகிறேன் என்று சொல்லி போனை கட்செய்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி திடீரென வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் ராபின்சன் குடும்பத்தார் காவல் நிலையத்தில் தங்களின் மருமகளை காணவில்லை என புகார் அளித்துள்ளனர்

இதையடுத்து செய்தியை அறிந்த பிலோமினா குடும்பத்தார் திருவையாறுக்கு வந்து அவர்களும் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பிலோமினாக்கு காதலர் யாரேனும் உள்ளாரா? என்பது குறித்து பிலோமினாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர், மற்றும் காணாமல் போன பிலோமினாவை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.