ரூமுக்கு கூப்டாங்க..! கதவை மூடச் சொன்னாங்க..! சென்னையில் ஹோட்டர் ஊழியருக்கு கேரள இளம் பெண் கொடுத்த விபரீத அனுபவம்!

சென்னையில் குடிபோதையில் ஓட்டல் ஊழியர் மீது பாலியல் புகார் அளித்த பெண் போதை தெளிந்தவுடன் காவல்நிலையம் சென்று புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.


ஆழ்வார்பேட்டை, டி.டி.கே.சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் சில நாட்களுக்கு முன்னர் கேரளாவைச் சேர்ந்த பெண் அறை எடுத்துத் தங்கினார். ஹோட்டலின் வரவேற்பறைக்கு போன் செய்து, அறையைச் சுத்தம் செய்ய வேண்டும் எனக் கூற அங்கு சென்ற ஆண் ஊழியர் ஒருவர் அறையைச் சுத்தம் செய்துள்ளார். 

அப்போது போதையிருந்த அந்த இளம்பெண் துப்புரவு பணியாளரை பார்த்து முதலில் ஜன்னலை மூடும்படியும், பின்னர் கதவுகளை மூடும்படியும் கூறியுள்ளார். அவர் கூறியபடியே கதவுகளை மூடிய பிறகு அந்தப் பெண்ணின் அலறி சத்தம் போட்டார். இதையடுத்து ஓட்டல் ஊழியர்களிடம் துப்பரவுப் பணியாளர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக அந்தப் பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பெண் கொடுத்த புகாரில் ஹோட்டல் ஊழியர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஓட்டல் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை போலீஸ் செய்ய, போதை தெளிந்தவுடன் புகார் அளித்த அந்த இளம் பெண் காவல்நிலையம் வந்து, அந்த ஊழியரை விட்டுவிடுங்கள் என கூறினார்.

இதனால் டென்ஷனான போலீசார் தேவையற்ற புகாரால் 3 மணிநேரம் வீண் ஆனதாகவும் ஒரு அப்பாவியை தேவையின்றி விசாரணைக்கு அழைத்து வந்ததாகவும் நொந்து கொண்டனர். இதை அடுத்து அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பினர். 

ஒருவேளை வேண்டும் என்றே ஓட்டல் ஊழியர் மீது புகார் அளித்து ஓட்டல் நிர்வாகத்திடம் பணம் பறிக்க அந்த பெண் திட்டமிட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.