கிறிஸ்டியன் ஸ்கூல், காலேஜில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை! உயர்நீதிமன்றம் பகீர்!

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளது.


தாம்பரத்தில் இயங்கும் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் உதவிப் பேராசிரியர் எதிராக 34 மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். இந்த புகார்களை விசாரித்த கல்லூரிக் குழு உதவி பேராசிரியர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது.

இதுதொடர்பான வழக்கில் உதவி பேராசிரியர் சாமுவேல் இடம் விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீசை ரத்து செய்ய கோரி அவர் மேல்முறையீடு செய்தார்.

இதைவிசாரித்த நீதிபதி, நோட்டீஸ் ரத்து செய்ய மறுத்து விட்டார். மேலும் கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பெண்கள் பாதுகாப்பு உச்சபட்ச அபாயத்தை சந்திப்பதாக பொதுவான கருத்து இருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகவும் நீதிபதி குற்றம் சாட்டினார். கிறிஸ்தவ கல்வி நிலையங்கள் விதிகளை மீறுவதாகவும் நீதிபதி கண்டித்தார்.

பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்த அவர் அப்பாவி ஆண்களையும் காப்பாற்ற சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறினார்.

வரதட்சனை கொடுமை சட்டத்தை சுட்டிக்காட்டிய நீதிபதி அங்கீகரிக்கப்பட்ட தீவிரவாதம் போல் சட்டம் ஆண்களுக்கு எதிராக பிரயோகிக்கப்படுவதாக நீதிபதி கருத்து தெரிவித்தார்.