தங்க கம்மலை விழுங்கிய கோழி! படபடப்புடன் நடைபெற்ற ஆப்பரேசன் சக்சஸ்! ஆனால் பிறகு நேர்ந்த பரிதாபம்!

சென்னையில் வீட்டில் வளர்ப்பு பிராணியாக வளர்த்து வந்த கோழி அரை பவுன் தங்க கம்மலை விழுங்கியது. இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்து கோழியின் வயிற்றில் இருந்த கம்மலை வெளியே எடுத்துள்ளனர். பிறகு கோழிக்கு செயற்கைச் சுவாசம் மற்றும் மயக்க மருந்து கொடுத்து நிலையில் சிறிது நேரத்தில் கோழி உயிரிழந்துள்ளது.


சென்னையை சேர்ந்த புரசைவாக்கம் நெல்வயல் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் ஒரு பறவை காவலர்.இவருக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தான் ஆசையாக வாங்கிய கோழிக்குஞ்சை தனது குழந்தை போல் வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.

அவரது அக்காள் மகள் தீபா என்பவருக்கும் இந்த கோழி மிகவும் பிடித்துப்போனது. இந்நிலையில் இது குடும்பத்தில் ஒருவரைப் போலவே அந்தக் கோழியை வளர்த்து வந்துள்ளனர் தீபா வீட்டில் இருந்த போது  சிறிய தங்கக்கம்மலை கழட்டி வைத்துவிட்டு தலை வாரிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கே வந்த கோழி தீபாவுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

திடீரென அந்த கம்மலை விழுங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபா உடனே சிவக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து கோழியை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

அங்கு சென்று கோழி தங்ககம்மலை விழுங்கிவிட்டது. அதனை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க வேண்டும் என்றும் கோழியின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் வந்துவிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் கோழியின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது கோழியின் இரைப்பையில் தங்க கம்மல் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கோழிக்கு மயக்க மருந்து மற்றும் செயற்கை சுவாசம் கொடுக்க அறுவைச்சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை மேற்கொண்டதில் வெற்றிகரமாக கோழியின் வயிற்றில் இருந்த கம்பலை வெளியே எடுத்தனர். பின்னர் கோழியின் வயிற்றை தைத்து விட்டு செயற்கை சுவாசத்தை வெளியே எடுத்தபோது சிறிது நேரத்தில் கோழி பரிதாபமாக உயிரிழந்தது.

இந்நிலையில் மிகுந்த வருத்தம் அடைந்த சிவகுமார் கோழியை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று தான் குழந்தை இறந்தது போலவே பாவித்துக்கொண்டு கோழியை நல்ல முறையில் அடக்கம் செய்துள்ளார். இந்த காலக்கட்டத்தில் மனிதர்கள் மீது யாரும் இவ்வளவு அன்பு காட்டுவது இல்லை ஆனால் சிவகுமார் என்பவர் தான் வளர்த்த கோழியின் மீது இவ்வளவு பாசம் வைத்துள்ளார். என அருகில் உள்ளவர்களை மெய்சிலிர்க்கச் செய்துள்ளார் பறவை பாதுகாவலரான சிவகுமார்.