நடுரோட்டில் வைத்து காதலிக்கு 15 முறை கத்தி குத்து! காதலன் வெறிச் செயல்! பதற வைக்கும் காரணம்!

சென்னையில் காதலியை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த காவ்யா திருவான்மியூரில் தங்கி மென்பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். அவர், தன்னுடன் காஞ்சிபுரத்தில் சேர்ந்து படித்த திருத்தணியைச் சேர்ந்த கவின் என்பவனை காதலித்ததாகக் சொல்லப்படுகீறது.

படிக்கும் போது இருவரும் காதலித்து வந்த நிலையில், காவ்யாவுக்கு மட்டும் சென்னையில் வேலை கிடைத்துள்ளது. கவினுக்கு வேலை கிடைக்கவில்லை. மேலும் கவின் வேலைக்கும் செல்லாமல், பொறுப்பில்லாமலும் நடந்து கொண்டுள்ளான்.

இதனால் காவ்யா, கவின் உடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் காவ்யாவிடம் பேசிய கவின், இருவரும் பரிமாறிக் கொண்ட பரிசுப் பொருட்களை திருப்பி கொடுத்து விடலாம் எனக் கூறி வரவழைத்துள்ளான். இதனை நம்பி தனது குடியிருப்பை விட்டு வெளியே வந்த காவ்யாவை கத்தியால் கழுத்து, வயிறு, கை என பல இடங்களில் கவின் குத்தினான். 

இதனால் காவ்யா அலறவே அங்கிருந்தவர்கள் திரண்டு கவினைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இளம்பெண்ணை மீட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.