கிரிக்கெட் விளையாடிய போது விபரீதம்! நெஞ்சில் தாக்கிய பந்து! கடற்படை வீரருக்கு நேர்ந்த பரிதாப முடிவு!

கிரிக்கெட் விளையாடும்போது எதிர்பாராத விதமாக பந்து மார்பில் விழுந்ததில் கப்பற்படை வீரர் உயிரிழந்த சோகம் சென்னையில் நடந்து உள்ளது.


சென்னை துறைமுகத்தில் இந்திய கப்பற்படை கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் ராஜஸ்தானை சேர்ந்த கப்பற்படை வீரரான ஜோகேந்தர் சிங் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஓய்வு நேரத்தை கழிக்க துறைமுகம் அருகில் உள்ள மைதானத்திற்கு நண்பர்களுடன் சென்றார் ஜோகேந்தர் சிங்.

அங்க சக வீரர்களுடன் கிரிக்கெட் ஆடினார் ஜோகேந்தர் சிங். அவருடன் விவேக், கமல், விஷ்வாகுமார் ஆகியோரும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். ஜேகேந்தர் சிங் பேட்டிங் செய்ய விவேக் பந்துவீசிக் கொண்டு இருந்தார். அப்போது விவேக் வேகமாக வீசிய பந்து முதலில் தரையில் பட்டு பின்னர் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜோகேந்தர் சிங் மார்பில் விழுந்தது.

இந்த விபத்தில் ஜோகேந்தர் சிங் மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் உடனே அவரை ஐஎன்எஸ் அடையார் நேவி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்க அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரச மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே ஜோகேந்தர் சிங் பரிதாபமாக உயிரிந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த துறைமுக போலீசார் கப்பற்படை வீரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மே மாதம் ஜோகேந்தருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் கிரிக்கெட் விளையாடும்போது அவர் உயிரிழந்த சம்பவம் சகவீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.