சென்னை: சினிமா படத்தில் வருவதுபோல பெண்ணுடன் ரூம் போட்ட நபருக்கு, விடிந்ததும் பெரும் அதிர்ச்சி நிகழ்ந்தது.
நட்சத்திர விடுதியில் அழகியுடன் விடிய விடிய உல்லாசம்! விடிந்த பிறகு அரசு அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! சென்னை சம்பவம்!
சென்னையை சேர்ந்தவர் முன்னாள் அரசு அதிகாரி (பெயர் விவரம் வெளியிடவில்லை). இவர், கோயம்பேடு ஹோட்டல் ஒன்றில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணுடன் உல்லாசம் அனுபவிப்பதற்காக, ரூம் புக் செய்தார். கடந்த ஞாயிறன்று இரவு இருவரும் உல்லாசமாக இருந்தனர். அதன்பின், அந்த முன்னாள் அரசு அதிகாரி அசதியில் உறங்கிவிட்டாராம்.
விடிந்து பார்த்தபோது அவருடைய பொருட்களையும் காணவில்லை, அவருடன் வந்த பெண்ணையும் காணவில்லை எனக் கூறப்படுகிறது. அதிகாரியின் நகைகள், பணத்தை அந்த பெண் அபேஸ் செய்துவிட்டாராம்.
இதன்பேரில் ஓட்டல் நிர்வாகத்திடம் அதிகாரி புகார் கூற, அவர்கள் விசாரிக்கின்றனர். திருடனுக்கு தேள் கொட்டியதுபோல நிகழ்ந்த இச்சம்பவத்தால் அந்த அதிகாரி பெரும் பதட்டத்தில் உள்ளார். அதேசமயம், இந்த விவகாரம் பற்றி போலீசில் புகார் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.