அம்மா தவறிட்டாங்க..! அப்பா எவள் கூடவோ ஓடிட்டான்..! 11ம் வகுப்பு படித்த பானு எடுத்த பகீர் முடிவு! அதிர்ந்த உறவுகள்!

பெற்றோர் இல்லாமல் ஏக்கத்தில் இருந்து வந்த மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.


சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த பிரவீணா பானு 11ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலேயே தாய் இறந்துவிட மகளை வளர்க்காமல் தந்தையும் கைவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. தாய், தந்தை இழந்த மாணவியை உறவினர்கள் அரவணைத்து பள்ளிக்கு அனுப்பி வந்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த பிரவீனா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போலீசுக்கு தகவல் அளிக்க அவர்கள் வந்து பிரவீனா பானு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அவரது அறையில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் 'என் தற்கொலை முடிவுக்கு யாரும் காரணமில்லை. என்னுடைய உறவினர்கள் என்னை நன்றகாத்தான் பார்த்துக் கொள்கிறார்கள்.' என உருக்கமாக எழுதியுள்ளார். இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நேற்று முன்தினம் அவரது பள்ளியில் ஆசிரியர், பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

மற்ற மாணவ மாணவிகள் தங்களது பெற்றோரை அழைத்து வந்தனர். ஆனால் பிரவீனா யாரையும் அழைத்து செல்லவில்லை. இந்த ஏக்கம்தான் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படுகிறது.