சென்னையில் இளம் பெண் ஒருவர் இருமலுக்காக மருத்துவமனைக்கு சென்று சிறிது நேரத்தில் மயங்கி சுருண்டு விழுந்து மர்மமான முறையில் இறந்துள்ளார்.
இருமலுக்கு ஊசி போட்ட பெண் டாக்டர்..! அடுத்த நிமிடமே மூச்சுத் திணறி மயங்கி விழுந்து பலியான இளம் பெண்! சென்னை அதிர்ச்சி!

சென்னை, அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் நித்தியா 23 வயதே ஆன நித்தியா, கல்லூரி பட்டபடிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நித்தியாவிற்க்கு இருமல் அதிகமாக இருந்துள்ளதாக தெரிகிறது.
இதனால் அருகில் இருந்த தனியார் கிளினிக் ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளனர். இருமலுக்காக போட்ட ஊசியால் இளம் பெண் நித்தியா சிறிது நேரத்தில் மூச்சு திணறல் காரணமாக அவதிக்குள்ளாகியுள்ளார், இதனால் பதறிய பெற்றோர் மீண்டும் அந்த கிளினிக்கிற்க்கு கொண்டு செல்ல, அந்த மருத்துவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறியுள்ளார்.
இதற்கிடையில் மயங்கிய நிலையில் இருந்த நித்தியாவை பெற்றோர் அவசர அவசரமாக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கிருந்த மருத்துவர்கள்.நித்தியாவை சோதித்து பார்த்ததில் அவர் இறந்து 1/2 மணி நேரத்த்கிற்க்கு மேல் ஆனதாக கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ந்து போன பெற்றோர் அந்த கிளினிக் மருத்துவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, மர்ம மரணம் என்ற வகையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே நித்யாவிற்கு நரம்பில் ஊசி போட்டதால் ஏற்பட்ட விபரீதம் என்று புகார் எழுந்துள்ளது.