சென்னையில் பயங்கரம்! பிரியாணிக்கு சிக்கன் பீஸ் கேட்ட காதலியை கொலை செய்த காதலன்!

பிரியாணியில் பீஸ் இல்லை என்று தகராறு செய்த காதலியை காதலன் கொலை செய்த கொடூர சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.


சென்னை கோயம்பேடு வணிக வளாக பகுதியில் ஏராளமான தள்ளுவண்டி பிரியாணி கடைகள் உண்டு. சென்னையிலேயே இங்கு தான் விலை மலிவாக பிரியாணி கிடைக்கும். சிக்கன், மட்டன், பீஃப் என விதவிதமான பிரியாணி இங்கு விற்பனை செய்யப்படும்.

நள்ளிரவு நேரத்திலும் கோயம்பேடு பகுதியில் பிரியாணி கிடைக்கும். இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வந்து பிரியாணி சாப்பிடுவது வழக்கம். அப்படித்தான் ஒரு காதல் ஜோடி பிரியாணி கடைக்கு வந்துள்ளது.

சமார் 25 முதல் 30 வயது மதிக்கக்கத்தக்க அந்த காதல் ஜோடி இரண்டு சிக்கன் பிரியாணியை வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது காதலி தன்னுடைய பிரியாணியில் குறைவாக சிக்கன் பீஸ் இருப்பதாக காதலனிடம் கூறியுள்ளார். அதற்கு பிரியாணியில் அவ்வளவு தான் இருக்கும் என்று காதலன் காதலிக்கு பதில் சொல்லியுள்ளார்.

ஆனால் அதனை ஏற்காத காதலி உனது பிரியாணியில் அதிக பீஸ் உள்ளது என்று கூறி தகராறு செய்துள்ளார். இதனை தொடர்ந்து காதலன் – காதலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரியாணி பீசுக்காக ஏன் சண்டை போடுகிறீர்கள் என்று கடைக்காரரும் அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து சற்று நேரத்தில் ஒரு பெண் அலரும் சப்தம் கேட்டுள்ளது. சுற்றி இருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்த போது பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அந்த பெண் தான் காதலனிடம் பிரியாணி பீஸ் கேட்டு சண்டை போட்டவர்.

உடனடியாக பிரியாணி கடைக்காரர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். அந்த பெண்ணுடன் வந்த நபர் மாயமாகியுள்ளார்.

விசாரணையின் போது இருவரும் காதலன் காதலி போல் நடந்து கொண்டதாகவும், பிரியாணிக்காக சண்டையிட்டதாகவும் போலீசாரிடம் கடைக்காரர் கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த பெண் யார் என போலீசார் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.