எல்லாம் ஒரு ஜான் வயித்துக்கு..! பழைய டிவிஎஸ் 50..! மார்பில் பச்சிளம் குழந்தை..! நெகிழ வைத்த உணவு டெலிவரி பெண்!

சென்னையில், உணவு டெலிவரி வேலை செய்யும் ஒரு பெண் தனது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்யும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதனை நெட்டிசன்கள் மிகவும் நெகிழ்ச்சியுடன் உண்மையான சிங்கப்பெண் இவர்தான் என்றும், வாழ்க்கையில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார் என்றும் அவரை பாராட்டி வருகின்றனர்.  இன்று சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மிகவும் பிரபலமானவை. இதில் ஆண்கள் மட்டும் வேலைக்கு எடுத்து கொண்ட நிலையில், தற்போது இந்த உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் பெண்களையும் வேலைக்கு எடுத்து கொள்கின்றன.

அதுவும் குறிப்பாக வாழ்க்கையில் கஷ்டப்படும் பெண்களுக்கு உணவு டெலிவரி செய்யும் வாய்ப்பை அந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.  இந்நிலையில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் உணவு டெலிவரி செய்யும் வேலைகளை செய்து கொண்டு இருகிறார்கள். தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

அந்தவகையில் குழந்தையுடன் சென்று உணவு டெலிவரி செய்யும் பெண்ணின் புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், டிவிஎஸ் 50 வண்டியில் குழந்தையை தன்னுடன் சேர்த்து கட்டிக்கொண்டு அந்த பெண் உணவு எடுத்து செல்வது போன்ற புகைப்படம், நெட்டிசன்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனை குறித்து, உண்மையான சிங்கப்பெண் இவர்தான் என்றும், வாழ்க்கையில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறார் என்றும் நெட்டின்சன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும், அவர் குழந்தையுடன் ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டுவது ஆபத்தானது என்றும் கூறி, அவரை ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டி செல்லுமாறு கூறுங்கள் என்றும் அறிவுறுத்தி உள்ளனர் நெட்டின்சன்கள் .