பிராமணர்களுக்கு மட்டும் தான் பிளாட்! மற்ற ஜாதியினரை டென்சனாக்கும் விளம்பரம்! சென்னை பரபரப்பு!

திருச்சியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று கட்டி விற்கப்பட்டுள்ள பிளாட்டுகளை பிராமணார்களுக்கு மட்டுமே விற்பனை செய்வதாக சர்ச்சை ஏழுந்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு திராவிட பெரியார் மண்ணில் இப்படி ஒரு பிரச்சணையா என்று இந்த பிரச்சணையை கையில் எடுத்துள்ளது.


திருச்சியில் அமைந்துள்ள ஓம்சக்தி கண்ஸ்ட்ரக்சன் கட்டுமான நிறுவனம் ஒன்று திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்க மற்றும் மேலூர் சாலையில் அமைந்துள்ள லட்சுமி நகர் பகுதியில் பிளாட்டுகளை விற்பனை செய்து வருகிறது. 

இந்த நிலையில், ஓம்சக்தி கண்ஸ்ட்ரக்சன் நிறுவனம் தனது அறிவிப்பில் பிராமணார்களுக்கு மட்டுமே பிளாட்டுகள் விற்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி தலித், மைனாட்டி போன்ற வகுப்புகளை சேர்தவர்களுக்கு பிளாட்டுகள் விற்கப்படமாட்டது என்றும் அவ்வறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்புகளை அறிந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் முண்னணி மாவட்டச் செய்லாளர் வினோத் மணி என்பர் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார்.

மேலும், வினோத் மணி பெரியார் பிறந்த மண்ணில், 21ஆம் நூற்றாண்டில், சாதியை குறித்து வெளிப்படையான அறிவிப்பால் மறுபடியும் சாதி கலவரங்களை தூண்டும் விதமாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்த கட்டுமான நிறுவனம், பல விளங்களையும் கொடுத்துள்ளது. அது என்னவென்றால் “ குடியிருப்புகள் சைவ உணவு உண்பவர்களுக்கு மட்டுமே விற்கப்படும் என்றும், அதில் பிராமணர்களை தவறாக பிரிண்டாகி உள்ளது என்றும் கட்டுமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை குறித்து திருச்சி கார்ப்பரேஷ்னின் தலைமை பொறியாளரை சந்தித்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு, ஒரு சமூகத்திற்கு மட்டும் எப்படி பிளாட் கட்டுவதற்கு எவ்வாறு அனுமதி அளித்தார்கள் என்று பல கேளிவிகளையும் எழுப்பி உள்ளனர். பின்னர், தீண்டாமை சட்டத்தின் கீழ் கட்டடம் கட்டியவர் மீது நடவடிக்கை கோரி காவல்துறையினர் இடம் புகாரும் அளித்துள்ளனர்.

இது போன்ற தீண்டாமை கொடுமைகள், சென்னை போன்ற பெருநகரங்களில் கூட நடைபெறுகின்றது.வடமாநிலங்களைச் சேர்ந்த ஜெயின் சமூகத்தினர் கட்டும் அடுக்குமாடி குடியிருப்புகளை அவர்கள் சமூகத்தினர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த நிலையில் இன்னும் நீடித்து கொண்டு தான் இருகின்றது.