ரயில்வே சீசன் டிக்கெட்! பயணிகளுக்கு மோடி அரசு கொடுத்த புதிய சலுகை! என்ன தெரியுமா?

சென்னை கடற்கரை, சென்டிரலில் இருந்து புறப்படும் மின்சார ரெயில்களில் பயணம் செய்வதற்கு வசதியாக புதிய சலுகைகளுடன் தூரம் (10 கி.மீ ) அதிகரித்து மாதாந்திர பயண அட்டை (சீசன் டிக்கெட்) வழங்கப்பட்டு வருகிறது.


தெற்கு ரெயில்வே விதிகளின்படி சீசன் டிக்கெட்டில் 150 கி.மீ தூரம் வரை தான் பயணிகள் பயணம் செய்ய முடியும். ஆனால் தற்போது 10 கி.மீ தூரம் அதிகரித்து 160 கி.மீ தூரம் வரையுள்ள இடங்களுக்கு செல்லலாம் என்று அறிவித்துள்ளது.

இதே சமயம் மற்ற ரெயில்களில் இருந்து வருபவர்களுக்கு ரெயில்வே மாதாந்திர அட்டை வழங்கப்படுகிறது. இதனால் அரக்கோணம், திருத்தணி , செங்கல்பட்டு உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் மிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதன் மூலம் சென்னை சென்ட்ரலில் இருந்து காட்பாடி வழியாக மேல ஆளத்துர் வரையும்,சென்னை எழும்பூரில் இருந்து சென்னை பூங்கா வரையிலும், சென்னை கடற்கரையில் இருந்து குடியாத்தம் வரையும் சீசன் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சீசன் டிக்கெட்டுகள் யூ.டி.எஸ் செயலி மூலமாகவும் எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.