குறை பிரசவம்! வெறும் 900 கிராம் தான்! இதயத்துடிப்பும் இல்லை! ஆனாலும் பேபியை காப்பாற்றிய சென்னை டாக்டர்கள்! எப்படி தெரியுமா?

சென்னை: எடை குறைவாக பிறந்த குழந்தைக்கு சென்னை டாக்டர்கள் பேஸ்மேக்கர் பொருத்தியுள்ளனர்.


சென்னையில் உள்ள சூரியா ஹாஸ்பிடலில் சில நாள் முன்பாக, எடை குறைவான நிலையில், பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. குழந்தையின் தாய்க்கு லுபஸ் பாதிப்பு இருந்து மீண்டுள்ளார். இதனால், குழந்தை குறை பிரசவத்தில் அதாவது 27 வாரங்களில் பிறந்திருக்கிறது. 900 கிராம் எடை மட்டுமே கொண்ட அக்குழந்தையின் இதய துடிப்பு நிமிடத்திற்கு 55 முதல் 60 ஆக உள்ள விவரம் சூரியா ஹாஸ்பிடல் மருத்துவர்களுக்கு தெரியவந்தது.  

ஒரு சாதாரண மனிதனின் சராசரி இதய துடிப்பு நிமிடத்திற்கு 140 முதல் 160 வரை இருக்கும். ஆனால், இதய துடிப்பு மிகக்குறைவாக உள்ளதை தொடர்ந்து, இதய துடிப்பை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைக்கு பேஸ்மேக்கர் பொருத்த மருத்துவர்கள் தீர்மானித்தனர்.

இதன்படி நீண்ட நேரம் போராடி, சனிக்கிழமை இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தற்போது குழந்தை நலமுடன் உள்ளது. இது, சென்னை மருத்துவ உலகில் நடைபெற்ற மிக முக்கியமான அறுவை சிகிச்சையாகக் கருதப்படுகிறது.