நண்பனின் மனைவியை கரெக்ட் செய்து குடும்பம் நடத்திய போலீஸ்காரர்! ஆனால் பிறகு அரங்கேறிய தரமான சம்பவம்!

சென்னையில் மனைவியை பிரிந்து வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்த காவலர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் காவலர் குடியிருப்பில் குடியிருக்கும் வெங்கடேசன் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கும் ஜெயா என்பவருக்கும் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது. குடும்பத் தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனிடையே புளியந்தோப்பு பகுதியில் அவரது நண்பர் ஜோதிராமலிங்கத்தின் மனைவி ஆஷாவுடன் பழக்கம் ஏற்பட இருவருக்கும் இடையே கள்ளக் காதல் மலர்ந்தது இதை தெரிந்து கொண்ட ஜோதிராமலிங்கம் ஆஷாவை வீட்டை விட்டு விரட்டிவிட தன்னுடனே ஆஷாவை வைத்துக்கொண்டார்.

வெங்கடேசன். இந்நிலையில் வெங்கடேசன் வேறு சில பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டுள்ளதாக சந்தேகப்பட்ட ஆஷா அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் பலத்த தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெங்கடேசன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக ஆஷா போலிசாரிடம் தெரிவித்தார்.

ஆனால் ஆஷாதான் தன்னுடைய நடத்தையில் சந்தேகப்பட்டு தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக வாக்குமூலம் அளித்தார். இதை அடுத்து ஆஷாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனைவியை பிரிந்து வாழும் வெங்கடேசன் தன்னுடன் வாழ்ந்து வந்த நிலையில் வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஆஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதற்கிடையே பலத்த தீக்காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.