சென்னை கல்லூரி விடுதியில் கடலூர் மாணவிக்கு நேர்ந்த விபரீதம்! கதறி அழுத உறவினர்கள்! அதிர வைக்கும் காரணம்!

சென்னையில் தன்னுடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.


கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவரின் மகள் கோமதி சென்னை வண்ணாரப்பேட்டை அரசு பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். 

அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வந்த கோமதி கடந்த திங்கட் கிழமை அன்று தனது அறையில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார் கோமதியின் புகைப்படங்களில் மர்ம நபர்கள் சிலர் அவதூறாக சித்தரித்து பதிவிட்டதே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் மிக தெரிந்த நபர்தான் இதுபோன்று செய்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளளனர்.

தன்னுடைய புகைப்படங்கள் ஆபாசமாக இருப்பதை பார்த்த கோமதி மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. கோமதியின் புகைப்படங்களை அவதூறாக சித்தரித்த நபர் யார், ஏற்கனவே தெரிந்தவரா என போலீசார் விசாரிப்பதோடு மட்டுமல்லாமல் சைபர் கிரைம் குற்றப்பிரிவு மூலம் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேஸ்புக்கில் அறிமுகம் ஆகும் நண்பர்களை நம்பை புகைப்படங்களை அனுப்ப வேண்டாம் என பலமுறை காவல்துறை அறிவுரை கூறியுள்ளது. அவர்கள் பேச்சு முட்டாள்தனமாக இருப்பதாக சிந்திக்கும் மாணவிகள் இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகள் குறித்த தகவலை கூட சொல்லாமல் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.