40 அடி உயர பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட காதலி! இரவுக் காட்சி காதலனுடன் சென்ற போது விபரீதம்!

ஓட்டேரி அருகே கட்டுபாட்டினை இழந்த மோட்டார் பைக் மேம்பாலத்தில் மோதியதில் ஒருவர் படுகாயம், மாணவி சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை மாதவரம் பால்பண்ணையை சேர்ந்த சுரேஷின் மகள் பிரியா (வயது 18). பெரம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தவர். நேற்று மாலை பிரியா, ராயப்பேட்டையில் உள்ள கல்லூரியில் படிக்கும் தனது நண்பரான மாதவரத்தை சேர்ந்த அப்துல் மாலிக்(18) என்பவரை சந்தித்த பின்னர் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியதில்

பைக்கை ஓட்டி வந்த அப்துல் மாலிக், மேம்பாலத்திலும், அவருக்கு பின்னால் அமர்ந்து வந்த  பிரியா, மோதிய வேகத்தில் தடுப்பு சுவரை தாண்டி சுமார் 40 அடி உயரம் உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே உள்ள சர்வீஸ் சாலையில் விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த பிரியாவை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு தீவிர சிகிச்சைக்கு பின்னர் பிரியா  பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தில் பிரியாவின் நண்பரான அப்துல் மாலிக் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.இது குறித்து மாலிக்கிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.