கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்து அறைக்குள் சென்ற இளம் பெண்! திறந்து பார்த்த பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் சென்னை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை கடிதமும் போலீசாருக்கு சிக்கியுள்ளது.


சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் என்பவரது மகள் கீர்த்தனா. இவர் மணலி பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று கல்லூரியின் பருவ தேர்வை முடித்துவிட்டு வீடு திரும்பிய கீர்த்தனா, தனது அறைக்குள் சென்று நீண்ட நேரம் கதவை மூடிக் கொண்டு வெளியே வரவில்லை. 

குடும்பத்தினர் தட்டிப் பார்த்தும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கீர்த்தனாவின் தந்தை, கதவை உடைத்து பார்க்கையில் பேரதிர்ச்சி காத்திருந்தது. 

உள்ளே கீர்த்தனா தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதனால் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் அறையை சோதனையிட்ட போலீசாருக்கு தற்கொலை கடிதம் கிடைத்து இருக்கிறது. அதில் பருவ தேர்வை சரியாக எழுதவில்லை. தனது தந்தை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். என்னால் மேலும் அவர் கஷ்டப்பட வேண்டாம் என எழுதப்பட்டிருந்தது.