அசுர வேகத்தில் பறந்த கார்..! ஜன்னல் வழியாக வெளியே வந்து பெண்கள் செய்த செயல்! துரத்திய இளைஞர்கள்! சென்னை திகுதிகு!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இளைஞர்களுடன் இரு இளம் பெண்கள் செய்த செயல் ! எச்சரித்த காவல்துறையினர்!


நேற்று இரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நள்ளிரவு இளைஞர்களுடன், இரு இளம் பெண்களின் செய்த செயலால் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். 

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கும் நிலையில், சென்னை சாந்தோம் புனித தோமையார் பேராலயத்திலும் கிறிஸ்துமஸ் பிராத்தனை முடிந்து பலரும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும் வேளையில், இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டனர்.

இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதை கண்ட பொது மக்கள் மிகவும் அச்சம் அடைந்தனர்.இதனிடையே காமராஜர் சாலையில் அசுர வேகத்தில் கார் ஒன்று சென்றது. அப்போது அந்த காரின் பின் இருக்கையில் இருந்த இரு இளம் பெண்கள் இருவர், பின்புற இருக்கையில் இருந்து வெளியே வந்து கூச்சலிட்டு ஆடினார்கள். இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இது குறிந்த தகவல் அறிந்த, மயிலாப்பூர் துணை ஆணையர் தேஷ் சங்கர் சஞ்சய் தலைமையிலான காவல்துறையினர் பைக் ரேஸில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், ஆபத்தான முறையில் இளம் பெண்கள் இருவரும் செய்த செய்ல மிகவும் எரிச்சலை உண்டாகியது.

இந்த சம்பவத்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆணையர், விழாக்கள் மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும் என்றும், மற்றவர்களையும் பொது மக்களுக்கு எவ்வித துன்பமும் விளைவிக்க கூடாது என்றும் கூறினார். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் பெற்றோர்கள் பார்த்துகொள்ள வேண்டும் எனவும் மீறி புத்தாண்டில் தங்கள் பிள்ளைகள் பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார் துணை ஆணையர் .