ஒரே அடி! கார் கண்ணாடியை உடை! உள்ளே இருப்பதை அள்ளு! சென்னையை கலக்கும் திருடர்கள்!

சென்னையில் கடந்த சில தினங்களில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற கார் கண்ணாடியை உடைத்து திருடும் நூதனக் கொள்ளை, சி.சி.டி.வி காட்சிகள் மூலம் சிக்கிய மர்ம நபர், பீதியில் பொதுமக்கள்.


சென்னையில் திருவான்மியூரில் கிளினிக் நடத்தி வரும் மருத்துவர் கோசைகன், நேற்று கிளினிக் வெளியே தனது காரினை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது யாரோ அவரது கார் கண்ணாடியை உடைத்து உள்ளிருந்த விலை உயர்ந்த லேப்டாப் மற்றும் 4 பவுன் தங்க மோதிரத்தை பையுடன் திருடிச்சென்றுள்ள. சம்பவத்தை அடுத்து காவல் துறையிடம் புகார் அளிக்கபட்டது.

இதன்படி அருகில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் டாக்டரின் கார் கண்ணாடியை உடைத்து பொருட்களை திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தன, மேலும் இதே போல அடையாறு எல்.பி சாலையில், மாடலிங் செய்யும் சித்தார்த் என்பவரது கார் கண்ணாடியை உடைத்து ரூ 26 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது.

தொடர் கொள்ளை சம்பவத்தினால் பீதியில் உள்ள பொதுமக்கள் விரைவில் காவல் துறையினர், சம்பந்தபட்டவர்களை கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.