எகிறி அடித்த எடப்பாடி! பதறிய தயாநிதி மாறன்! செம ஹாட் மத்திய சென்னை!

மத்திய சென்னையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாநிதி மாறனுக்கு எதிராக அடுக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று கூட தயாநிதி மாறனால் பதில் சொல்ல முடியவில்லை.


மத்திய சென்னை பாமக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது தயாநிதி மாறன் இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் ஒருவர் என்றும் தேர்தல் சமயத்தில் மட்டுமே தொகுதி பக்கம் வருபவர் என்றும் விமர்சித்தார்.

அதுமட்டுமல்லாமல் சென்னையில் போட் கிளப் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு தயாநிதி மாறன் வீடு வைத்துள்ளதாகவும் மாறன் சகோதரர்களின் 49 தொலைக்காட்சிகள் மூலம் மக்களின் பணம் கொள்ளை எடுக்கப்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சுக்கு தயாநிதி மாறன் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் மத்திய சென்னையில் தனக்காக வாக்கு கேட்டு வீடு வீடாக சென்று தயாநிதி மாறன் பிரச்சாரம். அப்போது பேசிய தயாநிதி மாறன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாய் திறக்கவே இல்லை.

எடப்பாடி பழனிசாமி மக்களால் முதலமைச்சர் ஆனவர் இல்லை என்று மட்டும் கூறிவிட்டு வேறு பக்கம் பிரச்சாரத்தை திருப்பிவிட்டார். நேற்று தயாநிதி மாறன் குறித்து முதலமைச்சர் கூறிய குற்றச்சாட்டு ஒன்றுக்குக்கூட அவரிடமிருந்து பதில் வரவில்லை.

இதற்கு காரணம் நேற்றும் தேர்தல் பிரச்சாரத்தின் போது தயாநிதி மாறன் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி முதலமைச்சர் எகிறி அடித்து தான் என்கிறார்கள். இங்கே எடப்பாடிக்கு பதிலளித்து மீண்டும் அவரை அதே பாணியில் பேசவைத்து விடுவோமோ என்று கருதி தயாநிதி மாறன் பதறிப் போய் விட்டதாக அதிமுகவினர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

முதலமைச்சர் பிரச்சாரம் முடித்துச் சென்ற பிறகு மத்திய சென்னை தொகுதியில் பாமக திமுக இடையிலான தேர்தல் போட்டி செம ஹாட் ஆகியுள்ளது.