நர்ஸ் செய்த சுகமான மசாஜில் மயங்கிய பெண் தொழில் அதிபர்! பிறகு அரங்கேறிய விபரீதம்!

சென்னையில் தொழிலதிபரின் மனைவிக்கு பிசியோதெரபி செய்ய வந்த நர்ஸ் ஒருவர் அவர்களது வீட்டில் இருந்து சுமார் 7 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.


சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலனி பகுதியை சேர்ந்த தொழில் அதிபரின் மனைவி ராதா 65, இவருக்கு சில நாட்களாகவே தீராத மூட்டு வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மருத்துவரிடம் ஆலோசனைக்காக சென்றபோது அவர் ஒரு சில மாதங்கள் பிசியோதெரபி செய்து வந்தால் மூட்டுவலி குணமாகும் என தெரிவித்துள்ளார்.

ராதா மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் நர்ஸ் ஒருவரை தனது வீட்டிற்கு சிகிச்சைக்கு அனுப்பும்படி மருத்துவமனையில் கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஒரு ஏஜென்சி மூலம் பிசியோதெரபி செய்ய சௌமியா என்ற பெண்ணை ராதாவின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஒரு நாளைக்கு இரண்டு முறை என சில நாட்கள் பயிற்சி செய்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் சௌமியா உடல் முழுவதும் எண்ணெய் ஊற்றி மசாஜ் செய்ய வேண்டுமென ராதாவிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதை நம்பி நகைகளை கலட்டி அருகே வைத்து உள்ளார். 

பின்னர் ராதாவிற்கு உடம்பு முழுவதும் எண்ணையை தேய்த்து நன்றாக மசாஜ் செய்துள்ளார். நர்ஸ் கை வண்ணத்தால் ராதா அப்படியே மயங்கியுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்டு  சௌமியா உடனே நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். ராதா குளித்துவிட்டு வந்து சௌமியாவை தேடியபோது சௌமியா வீட்டில் இல்லாதது தெரியவந்தது.

இந்நிலையில் உடனே வந்து நகைகள் மற்றும் பணம் கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரியவந்தது. உடனே ராதா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் ஒன்றை அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சியை பார்த்த போது சௌமியா வீட்டிலிருந்து பதட்டத்துடன் வெளியேறியது அதில் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் சௌமியா தான் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் என போலீசார் உறுதி செய்தனர். இந்நிலையில் சௌமியாவை வேலைக்கு அமர்த்திய ஏஜென்சியை தொடர்பு கொண்டு அவர்களிடம் சௌமியாவின் விலாசத்தை பெற்ற போலீசார் அவரது வீட்டில் சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சௌமியாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.