கைக்குழந்தையை சுமந்தபடி உணவு டெலிவரி..! ஏழைத்தாயை நேரில் அழைத்து நெகிழ வைத்த கனி அக்கா..!

சென்னையில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் உணவு சப்ளை செய்யும் பெண்ணிற்கு உதவ முன்வந்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி அவருக்கு அரசாங்க வேலைக்கு சிபாரிசு செய்வதாக உறுதியளித்துள்ளார்.


சென்னை எழும்பூரில் சேர்ந்தவர் வள்ளி 37, இவரது கணவர் தினகரன் 39 இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்று உள்ளது. தினகரன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஏடிஎம்மில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் கடன் சுமை மற்றும் வறுமை காரணமாக வள்ளி வேலை தேட ஆரம்பித்துள்ளார். இதையடுத்து தனது குழந்தையை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத பட்சத்தில் குழந்தையை தன்னுடனே வைத்துக் கொள்ளும்படி வேலை தேட ஆரம்பித்துள்ளார்.

இதையடுத்து சென்னையில் உணவு சப்ளை செய்யும் நிறுவனமான உபெர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.அங்கு வேலைக்கு சேர்ந்த பிறகு தனது குழந்தையையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் உணவு சப்ளை செய்து வருகிறார். பொதுவாகவே சென்னையில் இயங்கி வரும் ஸ்விக்கி சோமடோ உபெர் போன்ற உணர்வு சப்ளை செய்யும் நிறுவனங்களில் பெரும்பான்மையாக இளைஞர்களே பணியாற்றி வருகின்றனர்.

குறைந்த அளவு மட்டுமே பெண்கள் அந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். பொதுவாக உணவு சப்ளை பிரிவில் ஆண்களே அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வள்ளி தனது கைக்குழந்தையுடன் உணவு சப்ளை செய்வதை பார்த்த பலர் அவரை பாராட்டி வருகின்றனர். மேலும் புகைப்படம் எடுத்து ட்விட்டர் பக்கத்திலும் அவற்றை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சமீபத்தில் இந்து நாளிதழில் அவரைப் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதையடுத்து அதை பார்த்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி அவருக்கு உதவ முன்வந்துள்ளார். தனது உதவியாளரின் மூலம் வள்ளியை வரவழைத்து தனது வீட்டில் வைத்து பேசியுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி அவரது உதவியாளர் மூலம் தன்னை அவரது வீட்டிற்கு அழைத்து பாராட்டியதாக வள்ளி தெரிவித்துள்ளார். பின்னர் தனக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குடும்ப சூழ்நிலை காரணமாக மட்டுமே நான் இந்த வேலையை செய்து வருகிறேன் என கூறியபோது அவர் உனக்கு என்ன உதவி வேண்டும் எனக் கேட்டார் அப்போது நான் எனக்கு நிரந்தரமான ஒரு வேலை அரசுத்துறையில் வாங்கிக்கொடுத்தால் பிழைத்துக்கொள்வேன் மற்றும் என் மகனையும் நன்றாக படிக்கவைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

நிரந்தர வேலை வாங்கிக்கொடுத்தால் உடனடியாக வேலைக்கு சேர முடியுமா என கேட்டார் நான் என் மகனை எங்கும் விட்டுச்செல்ல முடியாததால்தான் உபர் உணவு சப்ளை வேலைக்கு செல்கிறேன், 7 மாதம் ஆனபின் ஏதாவது குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிடும் நிலைக்கு குழந்தை வளர்ந்தபின் வேறு வேலைக்கு நிச்சயம் செல்வேன் என தெரிவித்தேன். 

பின்னர் வயதான என் தாய் தந்தைக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என்று சொன்னேன். உடனடியாக அதுகுறித்த விவரங்களை உதவியாளரிடம் அளித்தால் அவர் அதற்கான உதவியை செய்வார் என்று தெரிவித்தார். எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்து எனக்கு ஒரு புடவையை பரிசாக கொடுத்தார் என வள்ளி தெரிவித்துள்ளார்.ஊடகத்தில் வந்த செய்தியைப் பார்த்து எங்களது குடும்பத்திற்கு உதவ முன் வந்ததும் மற்றும் என் மகன் படிப்புக்கு உதவவும் அவர் முன் வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அழிக்கிறது என்று வள்ளி தெரிவித்துள்ளார்.