பெண்களை குறிவைக்கும் ஆட்டோக்காரி அர்ச்சணா! அதிர வைக்கும் செயல்! பதற வைக்கும் சம்பவம்! சென்னை திகுதிகு!

சென்னை அயனாவரத்தில் பட்டபகலில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் ஆட்டோவில் வந்து வழிப்பறி செய்த பெண்ணை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சர்மிளா இவர் மாலை வேளையில் காய்கறி வாங்க மார்க்கெட்டிற்கு தனியே சென்றுள்ளார். காய்கறி வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார் அப்போது சாலையோரமாக நடந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது ஒரு ஆட்டோ அவரை பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.

பின்னே ஆட்டோ வருவதை பார்த்த சர்மிளா ரோட்டின் விளிம்பிற்கு வந்துள்ளார். அப்போது ஆட்டோவில் இருந்த ஒரு பெண்மணி அவரது கைப்பையை பறித்து கொள்ளவே ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.

இந்நிலையில் சர்மிளா உடனே அருகில் இருந்தவர்கள் உதவிக்கு கூப்பிட அங்கிருந்தவர்கள் உடனே திரண்டு ஆட்டோவை மடக்கி பிடித்தனர்.பின்னர் அதில் இருந்த ஓட்டுனர் இறங்கி ஓடி விட்டதாக தெரிகிறது. 

இந்நிலையில் அதிலிருந்த பெண்மணியை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழிப்பறி செய்த பெண்ணிடமிருந்து சர்மிளாவின் கைப்பையை சர்மிளாவிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் வழிப்பறி செய்த பெண்ணை பற்றி போலீசார் விசாரித்ததில் அவர் ஆந்திராவைச் சேர்ந்த அர்ச்சனா என்பது தெரியவந்தது. அவர் புளியந்தோப்பில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் இது குறித்து அர்ச்சனாவிடம் மேலும் விசாரணை நடத்திய போலீசார் ஆட்டோ ஓட்டுநர்களிடம் இனிமையாக பேசி அவர்களை வழிப்பறியில் ஈடுபடுத்தி அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுத்து வருவதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்நிலையில் அவரை கைது செய்த போலீசார் ஆட்டோ ஓட்டுநரை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் அந்த ஆட்டோ ஓட்டுநரான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இருவர் மீதும் கொள்ளை குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.