மீண்டும் மோடி பிரதமராக வாய்ப்பில்லை! அடித்துக் கூறும் கமல்!

கோவையில் இருந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்


 அப்போது பேசிய அவர்

தொடர்ந்து மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதால் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது அவர்களுடைய கண்ணில் தெரியும் நம்பிக்கை எனக்கும் நம்பிக்கையை ஏற்படுகிறது

சூறாவளி பிரச்சாரம் என்பதால் மக்களுடன் நேரடியாக பேசுவதற்கான வாய்ப்பு இல்லை வழக்கமான உரையாடல்களை மட்டுமே செய்கிறோம்

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு ஓரளவிற்கே திருப்திகரமாக இருக்கிறது

 பாரபட்சமின்றி அனைத்துப் பக்கங்களிலும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இருக்க வேண்டும்

பட்டுவாடா செய்யப்படும் பணங்கள் அனைத்தும் மக்களின் பணம் 

அவைகள் பிடிபடும்போது தங்கமாகவும் வைரம் ஆகவும் இருக்கிறது

மீண்டும் மோடி பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம் 

கடந்த ஐந்து ஆண்டுகால பாஜக அரசின் மீதான விமர்சனங்கள் ஏராளம் என்றார்.