பாலியல் கொடுமை..! முதன் முறையாக உண்மையை வெளியிட்ட நடிகை தமன்னா! என்ன சொன்னார் தெரியுமா?

திரைஉலகில் பாலியல் ரீதியாக தனக்கு தொல்லை வராமல் போனது தன்னுடைய அதிர்ஷ்டம் என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.


தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா தற்போது இந்தி திரைப் படங்களிலும் நடிக்கத் தொடங்கி உள்ளார். தனக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாக சொல்வது பொய் என தெரிவித்த தமன்னா, கடந்த ஆண்டில் கைநிறைய படம் வைத்து இருந்தேன். எனது படங்கள் நன்றாக ஓடியது. முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க தனக்கு அவசியம் இல்லை என கூறினார்.

முக்கிய கதாப்பாத்திரம் மட்டுமே தேர்வு செய்வதால் குறைந்த அளவு படங்களே வெளியாகிறது. அதற்காக படமே இல்லாமல் சும்மா இருப்பதாக அர்த்தம் இல்லை என கூறினார். பெண்களுக்கான எதிரான குற்றங்களை தடுக்க ஏற்படுத்தப்பட்ட இயக்கமான மீ டூ பற்றி தமன்னா கூறும்போது இது சினிமாவில் மட்டும் இல்லை. அனைத்து துறைகளிலும் இருக்கிறது.

நான் பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. அது எனது அதிர்ஷ்டம் என கூறினார். மேலும் சினிமாவில் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் புகார் அளித்ததால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கிறது என குற்றம்சாட்டினார் தமன்னா. மேலும் தான் கவர்ச்சிக்காக அழகு சாதனங்கள் பயன்படுத்துவது இல்லை எனவும் தமன்னா கூறினார்.