டியோ டேவிட்டும் மேலும் சில புள்ளிங்கோவும்..!செயினை அறுப்போம், டோப் அடிப்போம்..! டிக் டாக் வீடியோவும் போடுவோம்! சென்னை திகுதிகு!

சென்னையில் போதை மாத்திரைகளுக்காக இருசக்கர வாகனங்களில் சென்று 15க்கும் மேற்பட்ட வழிப்பறியில் ஈடுபடும் புளியந்தோப் புள்ளிங்கோ கேங்யை சேர்ந்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த புள்ளிங்கோ கூட்டம் மீன்கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் இரவு நேரங்களில் பிரதான வேலை சாலையில் தனியே நடந்து செல்லும் சுமாராக 40 வயதைக் கடந்தவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவதில் வழக்கமாக கொண்டு உள்ளனர். இதில் உள்ளவர்கள் 3 பேர் 18 வயதைத் தாண்டாத சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 இந்த கொள்ளையில், செல்போன், நகை, பணம், வாகனம் என எது கிடைக்கிறதோ அதனை பறித்துக் கொண்டு வந்து தங்களது பகுதியில் போதை மாத்திரை விற்கும் ஆசாமி ஒருவனிடம் கொடுத்து, மாத்திரைகளை வாங்கிச் செல்வது வழக்கம். கடந்த ஓராண்டாக இவர்கள் காவல் துறையினர் கண்களுக்கும் கவனத்துக்கும் புலப்படாமல் தப்பித்து வந்துள்ளது.

இந்த நிலையில், 3 நாட்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் பகுதியில் வைத்து ஒரு நபரை அடித்து, உதைத்து, கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகை உள்ளிட்டவற்றை மர்ம கும்பல் பறித்துச் சென்றுள்ளது. தகவல் அறிந்த காவல் துறையினர் அடுத்த சில மணி நேரங்களில் இதே பாணியில் பாண்டிபஜாரில் ஒருவரை வழிமறித்துத் தாக்கி செல்போன், பணம் உள்ளிட்டவை பறித்துச் செல்லப்பட்டதாக தி.நகர் காவல் துறையினர்க்கு தகவல் கிடைத்தது.

பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர், இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல்தான் என்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து தி.நகர் துணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

புளியந்தோப்பு பகுதியில் கண்காணிப்பை தீவிரப் படுத்திய காவல் துறையினர், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை சென்றுவிட்டு திரும்பிய டேவிட் உட்பட 7 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து , 2 இருசக்கர வாகனங்கள், 20 கிராம் தங்கம், 12 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையில், இந்த கும்பலுக்கு போதை மாத்திரைகளை விநியோகம் செய்ததாகக் கூறப்படும் நபரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.