சென்னையில் பயங்கரம்! 65 வயது மூதாட்டியை கத்தி முனையில் கற்பழித்த 3 சிறுவர்கள்!

சென்னை வியாசர்பாடியில் சிறுவர்கள் 3 பேர் சேர்ந்து கத்தி முனையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்கு வீடுகள் இல்லாத சில குடும்பங்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்த குடிசைப் பகுதியில் 65 வயதான மூதாட்டி ஒருவர் துணைகள் இன்றி தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் 17 வயதுடைய  சிறுவர்கள் 3 பேர் நேற்று இரவு மூதாட்டியின் குடிசைக்குள் நுழைந்துள்ளனர். மேலும் கத்தியை காட்டி மிரட்டி மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அருகில் இருப்பவர்கள் சத்தம் கேட்டு வெளியில் வந்த போது, அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

அத்துடன் மீண்டும் கத்தியை காட்டி மிரட்டி மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் 65 வயது மூதாட்டி என்றும் பாராமல் கற்பழித்துள்ளனர். இதனால் காயம் அடைந்த மூதாட்டி தற்போது  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து சென்ற எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் போலீசார் 3 பேரில் ஒரு சிறுவனை கைது செய்துள்ளனர்.  விசாரணையில் கஞ்சா போதையில் அந்த சிறுவர்கள் இந்த கொடூரத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. 

மேலும் இந்த சிறுவர்கள் கத்தியை காட்டி அக்கம் பக்கத்தில் உள்ள சிறுமிகளையும் பலாத்காரம் செய்ய முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தப்பி ஓடிய சிறுவர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.