வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து கொடூரமாக கொலை செய்த இளைஞரை சாகும் வரை தூக்கிலிட செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமிக்கு செக்ஸ் டார்ச்சர்! கொலை! காஞ்சிபுரம் இளைஞரை சாகும் வரை தூக்கிலிட உத்தரவு!
காஞ்சிபுரம்
மாவட்டம் திருப்போரூர் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, பையனூர் அரசுப் பள்ளியில்
9ம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர் கூலி வேலை செய்பவர்கள். கடந்த 2017ம்
ஆண்டு ஜூலை மாதம் 7ம் தேதி பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர்.
அப்போது சிறுமி
மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் ஆலத்தூர் கெங்கையம்மன் கோயில்
தெரு லஷ்மணன் என்பவரின் மகன் 24 வயதான அசோக்குமார்
என்பவர் சிறுமி வீட்டுக்கு அருகே வந்துள்ளான். அப்போது ஆள் நடமாட்டம் அந்த பகுதியில்
இல்லை.
இதனை பயன்படுத்திக்
கொண்டு சிறுமியை அங்கிருந்து வாயை மூடி தரதரவென காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளான்.
மேலும் வார்த்தைககளால் விவரிக்க முடியாத அளவிற்கு சிறுமியை கொடூரமாக செக்ஸ் சித்ரவதைக்கு
அசோக் ஆளாக்கியுள்ளான்.
அதோடு மட்டும்
அல்லாமல் சிறுமியை உயிரோடு விட்டால் வெளியே யாரிடமாவது சொல்லிவிடுவார் என்று அசோக்
பயந்துள்ளான். இதனை அடுத்து சிறுமியை கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு
தப்பினான்.
உடலை கைப்பற்றி
போலீசார் விசாரித்தனர். தொடர் விசாரணையின் முடிவில் அசோக் குமார் சிக்கினான். மருத்துவ
பரிசோதனையில் சிறுமியை அசோக்குமார் செக்ஸ் டார்ச்சர் செய்து கொலை செய்தது உறுதியானது.
இந்த வழக்கு
செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் அஷோக் குமார் தான் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை
செய்தான் என்பது நிரூபனமானது. இதனை அடுத்து அசோக்குமாரை சாகும் வரை தூக்கிலிட நீதிபதி
வேல்முருகன் உத்தரவிட்டார்.
சிறுமியை
மிக கொடூரமாக முறையில் செக்ஸ் டார்ச்சர் செய்த அசோக்கிற்கு கருணையே காட்ட முடியாது
என்று நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனை அடுத்து அசோக்குமாரை போலீசார்
அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.
முன்னதாக
சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து போரூரில் வைத்து கொடூரமாக கொலை செய்த தஷ்வந்துக்கு
இதே நீதிபதி வேல்முருகன் தான் மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.