செம்பருத்தி சீரியலில் வரும் பார்வதி தான் காங்கிரஸ்! வனஜா தான் பாஜக! கார்த்தி சிதம்பரத்தின் அடடே பிரச்சாரம்!

செம்பருத்தி சீரியல் பற்றி சொல்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு டீசல் விலை ஏறிவிட்டது. கேபிள் டிவி கட்டணம் உயர்ந்து விட்டது. திருமயத்தில் கார்த்திக் சிதம்பரம் பேச்சு


பார்வதி என்றால் காங்கிரஸ் வனஜா என்றால் பாஜக என்றும் செம்பருத்தி சீரியலில் உள்ள வனஜா போல் மோடி கொடுமைக்காரர்  புதுக்கோட்டை மாவட்டத்தில் காஜா புயலால் தென்னை மரம், பலா மரம் பாதிப்பு  பல வீடுகள் இடிந்து விட்டன ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்து  பாதிப்பு ஏற்பட்ட போது நரேந்திர மோடி தமிழகம் வரவில்லை. தற்பொழுது தேர்தலுக்காக நான்கு முறை வந்துள்ளார்.

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு 15,000 கோடி தமிழக அரசு கேட்டும் வெறும் ஆயிரம் கோடி மட்டுமே நரேந்திர மோடி கொடுத்தார் தற்போது அவர்களுடன் அதிமுகவினர் கூட்டணி வைத்துள்ளனர். கொடுமைக்காரர்  இந்தியாவை ஆள கூடாது. அதனால் நீங்கள் அனைவரும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழர்கள் என்றால் இளக்காரமாகப் பார்க்கக்கூடிய கட்சிதான் பாரதிய ஜனதா கட்சி அந்தக் கட்சியை மக்கள் நிராகரிக்க வேண்டும் பாஜக ஒரு இந்திக்கார கட்சி இந்தி பேசுபவர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி  புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேலூரில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் வாக்கு சேகரிக்கும் போது பேச்சு