முதல்வர் வெளிநாட்டுப் பயணம், குஷியில் குட்டி அமைச்சர்கள்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 28ம் தேதி புறப்பட்டுச் சென்று செப்டம்பர் அதிகாலை 2 மணிக்குத் திரும்புகிறார்.


இந்த விஷயத்தில் பெரிய அமைச்சர்களைவிட குட்டி அமைச்சர்கள் செம குஷியில் இருக்கிறார்கள். ஏனென்றால், யாரையும் பொறுப்பு அமைச்சராக எடப்பாடி நியமனம் செய்யவில்லை. அதனால், அமைச்சர்களை இந்த 15 நாட்கள் யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது.

இதுதவிர, ஊருக்குச் செல்லும் தகவலை ஒவ்வொரு அமைச்சருக்கும் தெரிவித்திருக்கும் எடப்பாடியார், ஒவ்வொருவருக்கும் அவர் தகுதிக்கு ஏற்ப ஸ்பெஷல் கிப்ட் கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்போதுதான் எந்த வில்லங்கும் செய்யாமல் இருப்பார்கள் என்று நினைத்திருக்கிறாராம்.

இந்த 15 நாட்களில் ஒவ்வொரு அமைச்சர்களும் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சுருட்டுவோம் என்று களம் இறங்கத் தயாராக இருக்கிறார்களாம். அதே நேரம் தன்னுடைய நம்பிக்கையான ஆட்களை ஒவ்வொரு அமைச்சர்களையும் கண்காணிக்க விட்டுச் செல்வதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எப்படியிருந்தாலும் அடுத்த சில நாட்கள் அமைச்சர்கள் காட்டில் அடை மழைதான்.