சென்னையில் போக்குவரத்து மாற்றம்! பெருங்களத்தூரில் இருந்து சிட்டிக்குள் நுழைய தடை!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு அக்டோபர் 11, 12ம் தேதிகிளில் சென்னை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தேசிய விருந்தினராக சென்னைக்கு வருகை புரியும் மிக முக்கிய பிரமுகரின் பயணம் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் அமைந்திட பொதுமக்கள் காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அக்டோபர் 11 மற்றும் 12ம் தேதி ஜி.எஸ்.டி சாலை (சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை), அண்ணா சாலை (கத்திபாரா முதல் சின்ன மலை வரை), சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் போக்குவரத்து தாமதமாக செல்ல வாய்ப்புள்ளது.

கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள், டேங்கர் லாரிகள் போன்ற வாகனங்கள் அக்டேபர் 11 காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மற்றும் அக்டோபர் 12 காலை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மேற்படி சாலைகளில் அனுமதிக்கப்படமாட்டாது.

அக்டோபர் 11 பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, பெருங்களத்தூரிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜி,எஸ்.டி சாலை நோக்கி அனுமதிக்கப்படாமல் “O” பாயின்ட் சந்திப்பிலிருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்படும்.

சென்னை தென்பகுதியிலிருந்து வடக்கு பகுதிகளுக்கு வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் ரோடு வழியாக , குரோம்பேட்டை - தாம்பரம் வழியாக மதுரவாயல் புறவழிச்சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம்

தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்தி க்கொள்ளலாம் .

அக்டோபர் 11 மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஜி,எஸ்.டி சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் கத்திப்பாரா சந்திப்பிலிருந்து கிண்டி நோக்கி அனுமதிக்கப்படாமல், 100 அடி சாலை வழியாக செல்ல திருப்பிவிடப்படும்.

அக்டோபர் 11 பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை, ராஜீவ் காந்தி சாலையில் (OMR) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

அக்டோபர் 12 காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, ராஜீவ் காந்தி சாலையில் (OMR) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும்.

அக்டோபர் 12 காலை 7 மணி முதல் பகல் 1.30 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.