ஏகாதசி நாளில் அனுப்பி இருந்தால் சந்திராயன்-2 வெற்றி பெற்றிருக்கும்! அமெரிக்காவே அப்படித்தான் செய்தது! பிஜேபி சாமியார் அதிரடி!

ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சாம்பாஜி பிதே, இப்போது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ' சிவ ப்ரதி ஹிந்துஸ்தான்' என்கிற அமைப்பை நடத்தி வருகிறார்.

சந்திராயன் -2 அனுப்பிய விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்க முடியாமல் போனதற்கான காரணத்தை இப்போது கண்டுபிடித்து வெளியிட்டு இருக்கிறார்.அதாவது,நிலவை அடிப்படையாக வைத்து காலத்தை கணக்கிடும் ( லூனார் கேலண்டர்) முறைப்படி சுக்கிலபட்சத்தில் ( வளர்பிறை)பதினோராவது நாளான ஏகாதசி திதியில் சந்திராயன் மிஷன் -2 ராக்கெட்டை அனுப்பி இருந்தால் அது வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி இருக்குமாம்.

அதை விட்டு விட்டு கிருஷ்ண பட்சத்தில் ( தேய்பிறை) அனுப்பியதால்தான் முயற்சி தோல்வி அடைந்து விட்டது என்று சுட்டிக்காட்டும் சாம்பாஜி பிதே அதற்கு அப்படித்தான் அமெரிக்காவும் செய்தது என்று நாஸாவை சாட்சிக்கு அழைக்கிறார்.

38 தடவை நிலாவில் வாகனத்தை அனுப்பி தோற்றுப்போன அமெரிக்க விஞ்ஞானிகள்,அவசர மீட்டிங் போட்டு,இந்திய முறைப்படி நல்ல நேரம் பார்த்து , ஒரு சுக்கில பட்ச ஏகாதசி தினத்தில் செய்த 39 வது முயற்சிதான் வெற்றி பெற்றது என்று சொல்லி இருக்கிறார்.

இவர் ஏற்கனவே தனது தோட்டத்தில் விளைந்த மாம்பழத்தை சாப்பிட்ட பல பிள்ளை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திருப்பதாக சொல்லி பரபரப்பை கிளப்பியவர். அதோடு,2018 ஜனவரியில் நடந்த பீமா கோரேகான் ஜாதிக் கலவரத்தில் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.