சந்திரயான் 2 விவகாரம்! கதறிய சிவன்! கட்டித் தழுவிய மோடி! நெகிழ வைத்த நிகழ்வு!

இஸ்ரோ நிறுவனத்தில் உரையாற்றி விட்டு புறப்பட்ட மோடியை வழியனுப்ப வந்த இஸ்ரோ தலைவர் அவரை பார்த்து கண் கலங்கினார். இதையடுத்து சிவனை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார் பிரதமர் நரேந்திர மோடி.


சந்திரயன் -2 விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் நிகழ்வு கடைசி நேரத்தில் தோல்வியை தழுவியது. விக்ரம் தரை இறக்கும் பணி நள்ளிரவு 1.38 மணிக்கு தொடங்கப்பட்டது. 13 நிமிடங்களுக்குப் பிறகு தரையிறக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. 

விக்ரமின் தரை இறக்கும் திட்டம் நிலவிலிருந்து 2.1 கி.மீ உயரத்தில் வரை நல்ல முறையில் காணப்பட்டது. இதற்குப் பிறகு தான், லேண்டரிலிருந்து எந்த தகவலும் வரவில்லை. கடைசியாய் வந்த தகவல்களை வைத்து தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்வோம் என இஸ்ரோ தலைவர் சிவன் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய விஞ்ஞானிகள் இடையே ஆற்றிய உரையில் இன்று சில தடைகள் ஏற்பட்டுள்ளன, ஆனால் அது நமது உறுதியை பலவீனப்படுத்தாது. அதற்கு பதிலாக, அது நம்மை பலப்படுத்துகிறது. நான் உங்களுடன் ஒவ்வொரு கணமும் இருக்கிறேன். இன்று நீங்கள் தடைகளை எதிர்கொண்டிருந்தாலும், நம்பிக்கையை இழக்கவில்லை. உண்மையில், இது பன்மடங்கு பலப்படுத்தியுள்ளது என நம்பிக்கை தெரிவித்தார்.

விஞ்ஞானிகளிடம் பேசிவிட்டு புறப்பட்டு சென்ற பிரதமர் மோடியை வாசல் வரை சென்று வழியனுப்பிய இஸ்ரோ தலைவர் சிவன் திடீரென கண்ணீர் விட்டு அழுதார். இதை பார்த்த பிரதமர் மோடி சந்தியரான் 2 தோல்வியில் ஏற்பட்ட வருத்தம் தனக்கும் சிறிது இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இஸ்ரோ தலைவர் சிவனை கட்டியணைத்து அவரது முதுகை தேய்த்தபடி ஆறுதல் கூறுவிட்டு பின்னர் பிறப்பட்டு சென்றார்.