உதயநிதிக்கு வாய்ப்பு… கனிமொழிக்கு ஆப்பு…. தொடரும் புறக்கணிப்பு

தி.மு.க.வில் நேற்றுவந்த உதயநிதிக்கு வாய்ப்புகள் கொடுத்து மரியாதை கொடுக்கும்போது, கனிமொழியை ஓரங்கட்டுவது தொடர்ந்துவருகிறது. இது, தி.மு.க. நிர்வாகிகளிடம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


உதயநிதிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவருவதால்தான், தேர்தல் அறிக்கை ஆலோசனைக் கூட்டங்களை கனிமொழி திட்டமிட்டே புறக்கணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

டி.ஆர் பாலுவை தலைவராகக் கொண்ட திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் பத்தோடு பதினொன்றாக கனிமொழி நியமிக்கப்பட்டார். கனிமொழியிடம் எந்த ஆலோசனையுமே செய்யாமல், அவராகவே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறாராம்.

இதன் காரணமாக கோவை, ஈரோடு, நாமக்கல் என அடுத்தடுத்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களை கனிமொழி திட்டமிட்டே புறக்கணித்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஸ்டாலின் இன்னமும் மத்தியஸ்தம் செய்யவில்லை என்பதுதான் கனிமொழியை அதிகம் கோபத்திற்குத் தூண்டியுள்ளது.

கனிமொழியின் கோபம் எப்போது வெடிக்கப் போகிறதோ..?