மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு! அதிரடியாக பதவி விலகிய அமைச்சர்!

தனது மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து அமைச்சர் ஒருவர் திடீரென பதவி விலகியுள்ளார்.


பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினராகவும் மத்திய உருக்குத்துறை அமைச்சராக இருப்பவர் பிரேந்திர சிங். இவரது மகன் பிரேஜேந்திர சிங்குக்கு பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரஜேந்திர சிங் ஹரியானா மாநிலத்தின் ஹிசார் தொகுதியிலிருந்து போட்டியிட உள்ளார்.

இந்த நிலையில் பிரஜேந்திர சிங்கின் தந்தையும் மத்திய அமைச்சருமான பிரேந்திர சிங் திடீரென பதவி விலகியுள்ளார். மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய துடன் பாஜக மாநிலங்களவை எம்பி பதவியையும் துறந்துள்ளார்.

தனது மகன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள நிலையில் தான் அமைச்சராக நீடிப்பது விமர்சனத்திற்கு ஆளாகும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறி அனைவருக்கும் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளார் பிரேந்திர சிங்.