ஸ்கூட்டர் ஓட்டும் கிராமப் பெண்களை குறி வைக்கும் பகீர் கும்பல்! ஏன் தெரியுமா?

இன்றைய கால கட்டங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் எல்லாத்துறையிலும் முன்னேறி வருகிற நிலையில் வாகனம் ஓட்டுவது மட்டும் இதில் விதி விலக்கில்லை.


பெண்களை குறிவைத்து அரங்கேறிவரும் வன்முறைகளுக்கு பஞ்சமில்லை அதிலும் குறிப்பாக வாகனங்களை இயக்கும் பெண்கள் மீது பிரத்யேகமாக குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுப்படும் மர்ம கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது,பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள மேவானி பகுதியை சேர்ந்தவர் சாவித்ரி. 15 கி மீட்டர் வரை அன்றாடம் பயணித்த பணிக்கு செல்பவர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அவர் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது மோட்டார் வாகனத்தில்  வந்த இரு மர்ம நபர்கள் சாவித்திரி கழுத்தில் இருந்து 6 சவரன் மதிப்புள்ள நகையை பறித்து சென்றுள்ளனர்.

நிலைமையை சமாளிக்க முடியாத சாவித்திரி தடுமாறி வாகனத்தை விட்டு இறங்கி சத்தம் போடுவதற்கு முன்னதாக மின்னல் வேகத்தில் மறைந்த திருடர்கள் குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் குறிப்பாக ஆள் நடமாட்டம் இல்லாத கிராம பகுதியில் இருக்கும் டூ வீலர் வாகன உபயோகிக்கும் பெண்களை குறி வைத்து அரங்கேற்றபடுவது குறிப்பிடதக்கது. 

இதே போல் மேலும் பல பெண்களை குறி வைத்து அதிலும் டூவிலர் ஓட்டிச் செல்லும் பெண்களை குறி வைத்து நகைகளை பறிப்பது அதிகமாகியுள்ளது. இது காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தி மேலும் இதுப்போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க பொது மக்களின் சார்பில் கோரிக்கை வைக்கபட்டுள்ளது.