ஆஸ்திரேலியாவில் எந்த ஸ்பின் பவுலரும் செய்யாத சாதனையை செய்த இந்திய பவுலர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.


பேட்டிங்கில் தோணி அசத்தியது போல பவுலிங்கில் சுழற்பந்துவீச்சாளர் சஹால் அசத்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். குல்தீப் யாதவிற்கு பதிலாக மூன்றாவது போட்டியில் சேர்க்கப்பட்ட சஹால் ஆஸ்திரேலிய மண்ணில் எந்த சுழற்பந்துவீச்சாளரும் செய்யாத சாதனையை செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் 6 விக்கெட்களை சாய்த்து ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை திணறடித்தார். எந்த ஒரு சுழற்பந்துவீச்சாளரும் ஆஸ்திரேலியா மண்ணில் 6 விக்கெட்களை வீழ்த்தியதில்லை.

இந்த போட்டியில் 6 விக்கெட்களை சாய்த்ததன் மூலமாக ஆஸ்திரேலியா மண்ணில் சுழற்பந்து வீச்சில் 6 விக்கெட்களை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் என்ற சாதனையை செய்துள்ளார்.

ஷான் வார்னே, ரவி சாஸ்திரி, ஜிம்மி ஆடம்ஸ் போன்ற வீரர்கள் இதற்கு முன் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா மண்ணில் சுழற்பந்து வீச்சில் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் சஹால் ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.