இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டியில் தென்னாபிரிக்கா அணியின் வான் டெர் டுசெனை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால் கிளீன் போல்ட் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நூற்றாண்டின் சிறந்த பந்து வீச்சு! தென் ஆப்ரிக்காவை நிலை குலையச் செய்த சஹல்!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாபிரிக்கா அணியின் ஆம்லா மற்றும் டி காக் வந்த வேகத்தில் அவுட் ஆகி மோசமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பின்னர் இணைந்த தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் வான் டெர் டுசென் நிதானமாக ஆடி அந்த அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தை ரிவேர்ஸ் ஸ்வீப் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட வான் டெர் டுசென் பந்தை தவறவிட்டார். இதனால் பந்து அவரின் பேட்டின் அருகே லெக் சைடில் பந்து பிட்ச் ஆகி ஸ்பின் ஆகி மிடில் ஸ்டம்ப்பை தாக்கியது.
இதை சற்றும் எதிர்பாராத வான் டெர் டுசென் அதிர்ச்சியானார். சஹால் வீசிய இந்த பந்தை, இந்த நூற்றத்தின் சிறந்த பந்து என்று நெட்டிசன்கள் சமூகவலை தளங்களில் வர்ணித்து வருகின்றனர்.