முதலமைச்சருக்கு எதிரான ஆபாச வீடியோ சிடி வழக்கு..! சாட்சி சொல்ல வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்! அடுத்தடுத்து அரங்கேறும் திருப்பம்!

டெல்லி: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல்லுக்கு எதிரான பாலியல் வழக்கில் சாட்சிகள் மிரட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.


கடந்த 2017ம் ஆண்டில் பத்திரிகையாளர் வினோத் வர்மா மற்றும் காங்கிரஸ் கட்சியின் அப்போதைய மாநில தலைவராக இருந்த பூபேஷ் பாகெல் ஆகியோர் ஒன்றுசேர்ந்து செக்ஸ் சிடி ஒன்றை வைத்து, பாஜகவை சேர்ந்த ராஜேஷ் மூனாத்தை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதன்பேரில் ராஜேஷ் போலீசில் புகார் அளித்த நிலையில், அதுபற்றி படிப்படியாக விசாரணை நடைபெற்று, சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இதன்மீது வினோத் வர்மா மற்றும் பூபேஷ் பாகெல் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்படடனர். தற்சமயம், பூபேஷ் பாகெல் சத்தீஸ்கர் மாநில முதல்வராக மாறிவிட்டார். ஆனாலும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  

இதில் தொடர்புடைய சாட்சிகளை தனது அதிகாரத்தை பயன்படுத்தி பூபேஷ் மிரட்டுவதாக, புகார் எழுந்துள்ளது. ஆனால், இதனை மறுத்துள்ள பூபேஷ் தரப்பு, இவ்வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.